உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புணரியல்]

69


உ-ம். அவனொடு சொன்னான்; அவனது புத்தகம்; ஒருபடி, இருபொருள், அறுதொழில், எழுகடல்; அது சிறிது, இதுகடல், உதுபார்; எதுபெரிது

22. குற்றுகரவீறு:- இடைத்தொடர், ஆய்தத்தொடர், சு, கு, பு என்பவைகளை ஈற்றிலுடைய நெடிற்றொடர், உயிர்த்தொடர், ஆகிய இவற்றுக்குப்பின் வரும் வல்லினம் இருவழியிலும் இயல்பாகும்.

  உ-ம். வேற்றுமை             அல்வழி. 
        தெள்குகால்          தெள்கு கடிது
        எஃகுகடுமை         எஃதுகடிது
        வரகுகதிர்            வரகுபெரிது 
        நாகுகால்             நாகுசெவி

23. டுகர றுகர வீறுகளையுடைய நெடிற்றொடர்க் குற்றுகரங்களிலும், உயிர்த்தொடர்க்குற்றுகரங்களிலும், உகரமேறிய மெய், வேற்றுமையிற் பெரும் பான்மையும், அல்வழியிற் சிறுபான்மையும் இரட்டிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/70&oldid=1533943" இலிருந்து மீள்விக்கப்பட்டது