இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புணரியல்]
69
உ-ம். அவனொடு சொன்னான்; அவனது புத்தகம்; ஒருபடி, இருபொருள், அறுதொழில், எழுகடல்; அது சிறிது, இதுகடல்,
உதுபார்; எதுபெரிது
22. குற்றுகரவீறு:- இடைத்தொடர், ஆய்தத்தொடர், சு, கு, பு என்பவைகளை ஈற்றிலுடைய நெடிற்றொடர், உயிர்த்தொடர், ஆகிய இவற்றுக்குப்பின் வரும் வல்லினம் இருவழியிலும் இயல்பாகும்.
உ-ம். வேற்றுமை அல்வழி. தெள்குகால் தெள்கு கடிது எஃகுகடுமை எஃதுகடிது வரகுகதிர் வரகுபெரிது நாகுகால் நாகுசெவி
23. டுகர றுகர வீறுகளையுடைய நெடிற்றொடர்க் குற்றுகரங்களிலும், உயிர்த்தொடர்க்குற்றுகரங்களிலும், உகரமேறிய மெய், வேற்றுமையிற் பெரும் பான்மையும், அல்வழியிற் சிறுபான்மையும் இரட்டிக்கும்.