இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
64
[எழுத்ததிகாரம்
யினமும் வந்தால் இருவழியிலும் இயல்பாகும். ஆயினும் தனி ஐகாரம், நொ, து, என்பவைகளுக்குப் பின்வரும் மெல்லினம் மிகும்.
உ - ம். விளமாட்சி, விளவலிமை || வேற்றுமை வழியில் மெலிஇடைகள் இயல்பாயின.
விளமாண்டது விளவலிது || அல்வழியில் அவை இயல்பாயின.
11. எகரவினா, முச்சுட்டுக்கள் ஆகிய இவற்றுக்குப் பின் யகரம் வந்தால் வகரம் தோன்றும். மற்றமெய்கள் வந்தால் அவை (வந்தமெய்) இரட்டிக்கும். உ-ம். எவ்யானை - வகரம் தோன்றியது எக்காலம் எந்நாள் மற்ற மெய்கள் இரட்டித்தன எவ்வலி
12. உயிரெழுத்துக்குப் பின் க, ச, த,ப க்கள் வந்தால் பின்வரும் சிறப்பு விதிகளால் விலக்கப்படாதன பெரும்பாலும் இரட்டிக்கும். உ - ம் கடுக்காய், செட்டித்தெரு.