இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புணரியல்]
71
மெய்யும், கவ்வொற்றுங் கெடுதலும், தெற்கு, மேற்கு என்னும் நிலை மொழிகளில் ஈற்றுயிர் மெய்கெட்டு றகரம் னகரமாகவாயினும் லகரமாக வாயினும் திரிதலும் விதியாம்.
உ - ம். வடகிழக்கு தென்மேற்கு வடகடல் தென்கடல் கிழமேற்கு மேலூர்.
26.- ஈற்றுயிர்மெய்யுங், கவ்வொற்றுங் கெட்டு நின்ற கிழ என்பது ஈற்றுயிர் கெட்டு முதல் நீளுதல் உண்டு.
உ - ம். கிழக்கு + கடல் - கிழகடல், கீழ்கடல்
27. எண்ணுப்பெயர்.-- a. ஒன்று என்பது ஈற்றுயிர் மெய்கெட்டு முதல் நீண்டு னகரம் ரகரமாதலும் முதல் நீளாது னகரம் திரிந்த ரகரத்தின் மீது உகரம் பெறுதலும் விதியாம்.
உ - ம். ஒன்று + நாள் = ஓர்நாள், ஒருநாள்.