இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72
[எழுத்ததிகாரம்
b. இரண்டு என்பதில் அண்டு என்பது கெட்டு உகரம் ஏறும்.
இரண்டு + நாள் = இருநாள்.
c. மூன்று முதல் குறுகி அல்லது குறுகாமல் ஈற்றுயிர்மெய் கெட்டு னகரம் வருகிற மெய்யாகத் திரிதல் அல்லது கெடுதல் ஆகிய விதியைப் பெறும்.
உ - ம். முந்நீர், மூவாயிரம், முவ்வட்டி.
d. நான்கு ஈற்றுயிர்மெய் கெட்டு னகரம் லகரமாகவாயினும் றகரமாகவாயினும் திரியும்.
உ - ம். நாலெட்டு, நாற்பொருள்
e. ஐந்து ஈற்றுயிர்மெய் கெட்டு நகரம் வருகிற மெய்யாகவாயினும் அதற்கினமாகவாயினும் திரிதலும், கெடுதலும் ஆகிய விதியைப் பெறும்.
உ - ம். ஐம்மூன்று, ஐங்கலம், ஐயா 1.
f. ஆறு, ஏழு என்பன முதல் குறுகும்.
உ - ம். அறுபது, எழுபது.