இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புணரியல்]
73
g. எட்டு ஈற்றுயிர் மெய்கெட்டு டகரம் ணகரமாகத்திரியும்,
எண்பது.
h. ஒன்பது என்பதினோடு பத்து அல்லது நூறு என்பது சேருமாயின் வருமொழியாகிய பத்தை நூறெனவும் நூற்றை ஆயிரம் எனவும் முறையே மாற்றி, நிலைமொழியில் பது என்பதைப்போக்கி, முதலில் இருக்கும் ஒகரத்தைத் தகரத்தின் மேலேற்றி னகரத்தை முறையே ணகரமாகவும் ளகரமாகவும் மாற்றுதல் முறையாம்.
உ - ம். தொண்ணூறு, தொள்ளாயிரம்.
i. ஒன்று, இரண்டு முதலிய எண்களின் முன் பத்து என்ற எண் வந்தால் வருமொழியாகிய பத்தின் இடையொற்று ஆய்தமாகத் திரிதலும் கெடுதலும் ஆகியவிதியைப் பெறும்.
உ - ம். இருபஃது, இருபது. 5