உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

[எழுத்ததிகாரம்

j. ஒருபது முதலியவற்றின் பின் ஒன்று முதலிய எண்ணுப் பெயர்களும், அவற்றையூர்ந்த பிறவும் வந்தால் நிலைமொழியின் இடையொற்றுத் தோன்றுதல் முறையாம்."

உ - ம். இருபத்திரண்டு, முப்பத்து மூன்றரை.

k. பத்து என்றதற்குப்பின் ஒன்று முதல் பத்து எண்களும் ஆயிரம், கோடி என்பவையும் பிறவும் வந்தால் நிலைமொழி யீற்றுயிர்மெய் கெட்டுப் பண்புத்தொகையில் இற்றுச் சாரியையும், உம்மைத்தொகையில் இன் சாரியையும் தோன்றும், ஒன்பதுக்கும் இவ்விதியே.

உ - ம். பதிற்று மூன்று: பண்புத்தொகை, பத்தாகிய மூன்று, முப்பது என்பது பொருள். பதின்மூன்று: உம்மைத்தொகை; பத்தும் முன்றும், பதின்மூன்று என்பது பொருள்.

l. பத்து என்பதன் முன் இரண்டு என்னும் எண் வந்தால் நிலைமொழியின்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/75&oldid=1471013" இலிருந்து மீள்விக்கப்பட்டது