உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

[எழுத்ததிகாரம்

30. ஏவல்வினை, முன்னிலைவினைகளின் ஈற்றுயிர்க்குப்பின் வல்லினம் இயல்பாதலும் விகற்பித்தலும் உண்டு.

உ - ம். எடு கிருஷ்ணா; கண்டனை கொற்றா. நட கொற்றா; நடக்கொற்றா.

31. ஏ, ஓ என்பவற்றை ஈற்றிலுடைய வினாப்பெயர்களுக்குப் பின் வலிமிகாது.

பலவகையான விளிப்பெயர் முன்னும் வலிமிகாது.

உ - ம். நம்பியே சென்றான்?. நம்பியோ சென்றான்?, நம்பிகொள்.

32. பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களின் ஈற்றுயிர்க்கு முன் வல்லினம் இயல்பாகும். சிறுபான்மை உயர் திணைக்கு முன் மட்டும் விகாரப்படுதலும் உண்டு.

உ - ம். தந்தை குறியன்; நம்பி பெரியன் இயல்பாயின. வழுதிக்கால்; விகாரப்பட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/77&oldid=1471014" இலிருந்து மீள்விக்கப்பட்டது