இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புணரியல்]
77
மெய்யீற்றுப் புணர்ச்சி.
மெய்முன் உயிர்வருதல்.
33. மெய்யின் பின் உயிர் வந்தால் அது மெய்யுடன் இயல்பாகச்சேரும்.
உ - ம். வேலழகு.
34. தனிக்குறிலைச்சார்ந்த மெய்யின் பின் உயிர்வந்தால் அம்மெய் இரட்டிக்கும்.
உ - ம். கல்லெறிந்தான்.
மெய்ன் மெய்வந்து புணர்தல்.
35. யகரமல்லாத மெய்யின் முன் யகரம் வந்தால் சில வேளைகளில் இகரம் தோன்றும்.
உ - ம். வேளியாவன்.
36. ண், ம், ல், வ், ள், ன் இந்த ஆறு மெய்களையும் ஈற்றில் உடைய ஏவல் வினைகள் வருமொழி முதலில் யகரமல்லாத மெய்கள் வரும்போது பெரும்பாலும் உகரச்சாரியை பெ-