இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78
[எழுத்ததிகாரம்
ற்று உயிரீற்றைப்போல வருமொழியுடன் புணரும்.
உ - ம். உண்ணுகொற்றா.
37. ணகர னகர வீறு a: நிலைமொழியீற்று ணகர னகரங்கள் வேற்றுமை வழியில் வல்லினம் வந்தால் முறையே டகர, றகரங்களாம். பிற இனங்கள் வந்தால் இயல்பாகும். அல்வழியில் மூவினமெய்கள் வந்தாலும் இயல்பேயாகும்.
உ - ம்.
மட்குடம்
பொற்குடம் மண்ஞாற்சி மண்யாப்பு |
வேற்றுமை |
மண்கடிது
பொன்பெரிது பொன்மாண்டது பொன்யாது |
அல்வழி |
b. தனிக்குறிலைச் சாராத ணகர னகரங்கள் வருமொழி நகரம் திரிந்தபின் கெடும்.
உ - ம். தூண் + நன்று = தூணன்று.
வான் + நன்று = வானன்று.