இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80
[எழுத்ததிகாரம்
நின்பகை இயல்பாயிற்று. நிற்கண்டேன் இரண்டாம் வேற்றுமையில் திரிந்தது.
C. தேன் என்னும் வார்த்தையின் பின் வல்லினம் வந்தால் இயல்பாதலும் சிலபோது ஈறு போய் வலியாவது அதற்கினமாவது மிகுதலும் மெலிவரின் ஈறு கெடுதலும் கெடாமையும் இடைவரின் இயல்பாதலும் ஆகிய விதியைப்பெறும். .
உ - ம். தேன்குடம்; இயல்பு
தேக்குடம்; வலிமிகுந்தது
தேங்குடம்; மெலிமிகுந்தது
தேமொழி; ஈறுகெட்டது
தேன்மொழி; இயல்பு
தேன்வலிமை; இயல்பு
d. தேன் என்பதன் பின் உயிர்வந்தால் இயல்பாகும், அல்லது நிலைமொழியின் ஈற்று னகரம்கெட்டுத் தகரம் தோன்றும். தோன்றிய தகரம் இரட்டிக்கும்.
உ - ம். தேனிறால்: இயல்பு , தேத்திறால்; தோன்றிய தகரம் இரட்டித்தது