இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பறந்து மேலே சென்றிடும்
பட்டம் பார்,பார் தம்பியே.
பருந்து கூட இதனைப்போல்
பறந்தி டுமோ, சொல்லுவாய்?
வாலும் உள்ள பட்டமாம்;
வாலில் லாத பட்டமாம்.
மேலும், மேலும் செல்லுதே.
'விர்விர்' என்று கத்துதே.
பச்சை, நீல வர்ணங்கள்,
பலவி தத்தில் காணுதே.
உச்சி மீது வானத்தை,
ஓட்டை செய்யப் பார்க்குதே!
35