2
பாலஸ்தீனம்
மார்க்கங்கள் ஆகிய இவற்றிற்கெல்லாம் ஒரு ‘ஜங்க்ஷன்’ மாதிரியாகவும், சூயஸ் கால்வாயின் பாதுகாவலனாகவும் பாலஸ்தீனம் இருக்கிறது.
பாலஸ்தீனத்திற்கு வடக்கில் சிரியா; கிழக்கில் ட்ரான்ஸ்–ஜார்டோனியா; தெற்கே ஹெட்ஜரஸ், எகிப்து முதலியன; மேற்கே மத்திய தரைக்கடல். ஐரோப்பிய யுத்த முடிவுக்குப் பின்னரே, இந்த எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டனவென்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. இந்த எல்லைக்குட்பட்ட தற்போதைய பாலஸ்தீனம், சுமார் பதினாயிரம் சதுர மைல் விஸ்தீரணமுடையது. 1931ம் வருஷத்தில் எடுக்கப்பட்ட ஜன கணிதப்படி, மொத்த ஜனத் தொகை 10½ லட்சம். ஆனால், இதற்குப் பிறகு ஜனத் தொகை அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் எடுத்த ஒரு கணக்குப்படி, அராபியர்கள் மட்டும் பத்து லட்சம் பேரும், யூதர்கள் மட்டும் நாலரை லட்சம் பேரும் இருக்கிறார்களென்றால், மற்ற ஜாதியாருடைய எண்ணிக்கையையும் சேர்த்து, ஜனத் தொகை அதிகம் பெருகியிருக்கிறதல்லவா?
யூதர்களில் பெரும்பாலோர் ஜையோனியர்கள். அதாவது பாலஸ்தீனத்தில் புதியதொரு யூத சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்ற நோக்கமுடையவர்கள். யூதர்களில் நூற்றுக்கு இருபத்தைந்து பேர் விகிதம் விவசாயத்தையே ஜீவனோபாயமாகக் கொண்டிருக்கிறார்கள். யூதர்களில், அரசியல் கட்சி பேதங்கள் அதிகமாயில்லை.