உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பாலஸ்தீனம்

ஜெருசலேம் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அப்பொழுது இந்த ஊரிலுள்ள பல கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் காலத்திலிருந்தே, பாலஸ்தீனத்தின் புராதன வாசிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டிருந்த யூதர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பரவத் தொடங்கினார்கள்.

கி.பி. ஏழாவது நூற்றாண்டிலிருந்து பாலஸ்தீனத்தின் ஆட்சி அராபியர்களிடமிருந்து வந்தது. கி.பி.11, 12வது நூற்றாண்டுகளில், முஸ்லீம்களிடமிருந்து, கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாகிய ஜெருசலேத்தை விடுவிக்க வேண்டு மென்னும் நோக்கத்துடன் ஐரோப்பாவிலிருந்து பல 'சமயத் தொண்டர் படை'கள் (Crusades) கிளம்பின. இவர்கள் வசத்தில் இந்த நாடு கொஞ்ச காலம் இருந்தது. இதற்குப் பிறகு, கி. பி. 1516ம் வருஷத்திலிருந்து துருக்கியர்கள், இந்த நாட்டின் ஆதிக்கத்தை ஏற்று நடத்தி வந்தார்கள். 1914ம் வருஷம் ஐரோப்பிய மகா யுத்தம் தொடங்கிய காலம்வரை துருக்கிய சாம்ராஜ்யத்தின் செல்வாக்கே இந்த நாட்டில் ஓங்கி நின்றது.

ஐரோப்பிய யுத்தத்தில், துருக்கி ஜெர்மனியுடன் சேர்ந்திருந்ததல்லவா? இதனால் நேசக்கட்சியினர், துருக்கியின் ஆதீனத்திற்குட்பட்டிருந்த நாடுகளையும் தாக்க வேண்டு மென்று திட்டம் போட்டனர். இதன்படி, நேசக் கட்சியினரில் முக்கியஸ்தர்களான பிரிட்டிஷார், பாலஸ்தீனத்தின் மீது படை யெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். 1918ம் வருஷம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/16&oldid=1657018" இலிருந்து மீள்விக்கப்பட்டது