உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூகோளமும்‌ சரித்திரமும்‌

7

செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீனம் முழுவதும் நேசக் கட்சியினர் வசமாகி விட்டது. பின்னர், சர்வ தேச சங்கத்தின் சார்பாக, இதன் நிருவாகம் பிரிட்டிஷார் வசம் ஒப்புவிக்கப்பட்டது. இதனை ஒரு ஹை கமிஷனர் மேலதிகாரியாயிருந்து நிருவாகம் செய்கிறார். இவர், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு மந்திரி இலாகாவினால் நியமிக்கப் படுகிறவர். இவருடைய வருஷச் சம்பளம் 4,000 பவுன்.

பாலஸ்தீனத்திலுள்ள முக்கியமான நகரங்களும், அவற்றின் ஜனத் தொகையும் வருமாறு:-

 பெயர்
டெல்-அவீவ்
ஜெருசலேம்
நாஜெரெத்
ஜாபா
ஹைபா
காஜா
நாபுளுஸ்
ஹெப்ரோன்
பெத்லஹெம்

ஜனத் தொகை
100,000  
90,526  
74,000  
51,876  
50,689  
17,500  
16,000  
16,700  
6,700  





நிருவாக சௌகரியத்திற்காக, பாலஸ்தீனத்தை வட பாலஸ்தீனம் என்றும், தென் பாலஸ்தீனமென்றும் இரண்டு ஜில்லாக்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஜில்லாவும், ஒவ்வொரு டிப்டி கமிஷனரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. வட பாலஸ்தீன ஜில்லாவின் தலைநகரம் ஹைபா. தென் பாலஸ்தீன ஜில்லாவின் தலைநகரம் ஜாபா. ஜெருசலேம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/17&oldid=1671112" இலிருந்து மீள்விக்கப்பட்டது