உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பால்பர்‌ அறிக்கை

13

இந்தப் பூர்வாங்கப் பிரச்னையில் நாம் பிரவேசிப்பதற்கு முன்னர் ‘ஜையோனிஸம்’ என்றால் என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொண்டு விடுதல் நல்லது. பாலஸ்தீனம் தங்களுடைய பூர்விக நாடென்றும், அது மீண்டும் தங்களுக்குரித்தான நாடாக வேண்டுமென்றும் யூதர்கள் நீண்ட காலமாகக் கிளர்ச்சி செய்து வந்தார்கள். ஆனால், இதனை ஓர் அரசியல் இயக்கமாக உருவகப்படுத்தியவன் தியாடோர் ஹெர்ஸல் (Theodor Herzl) என்பான். இவன் 1896ம் வருஷத்தில் இந்த ஜையோனிய இயக்கத்தை ஆரம்பித்தான்.[1] தங்களுடைய தேசீய புனருத்தாரணத்திற்காக ஏற்படுத்தப் பெற்ற இயக்கம் இஃது என்று நம்பி, உலகத்தின் நானா பாகங்களிலுமுள்ள யூதர்கள் இதற்கு ஆதரவு அளித்து வந்தார்கள்.1901ம் வருஷம் இந்த இயக்கத்தின் சார்பாக ‘யூதர்களின் தேசீய நிதி’யொன்று தொடங்கப் பெற்றது. ஏராளமான பணம் இதற்குச் சேர்ந்தது. யூதர்கள் சென்று குடியேறுவதற் கநுகூலமாக, பாலஸ்தீனத்தில், விஸ்தீரணமான பூப்பிரதேசங்கள், இந்த நிதிப் பணத்திலிருந்து வாங்கப் பெற்றன. வெளிநாடுகளிலிருந்த யூதர்கள் பலர், பாலஸ்தீனத்தில் வந்து குடி புகுந்தார்கள். அப்பொழுது இந்த நாடு, துருக்கி சுல்தான் ஆதீனத்திலிருந்துதல்லவா?


  1. ஜையோன் (Zion) என்ற ஒரு குன்றின் மீது, பாலஸ்தீன நகரம் கட்டப் பெற்றிருப்பதாக யூதர்களின் ஐதிகம். யூதர்களின் தேசீய இயக்கத்திற்கு ‘ஜையோனிஸம்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது, இந்தக் குன்றின் பெயரைக் கொண்டுதான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/23&oldid=1671182" இலிருந்து மீள்விக்கப்பட்டது