இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பால்பர் அறிக்கை
17
சில்ட் என்ற யூக முதலாளியின் மூலமாகப் பின்வரும் அறிக்கையை வெளியிட்டான்:-
பாலஸ்தீனத்தில் ‘யூதர்களின் தேசீய ஸ்தலம்’ ஸ்தாபிக்கப் படுவதை, அரசாங்கத்தார் ஆதரிப்பர். இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு வேண்டிய அநுகூலங்களைச் செய்வர். ஆனால், இதனால் தற்போது பாலஸ்தீனத்திலுள்ள யூதர்களல்லாத பிற சமூகத்தாருடைய பிரஜா உரிமைகளோ, மத சம்பந்தமான உரிமைகளோ பாதிக்கக் கூடிய காரியங்கள் செய்யப் படமாட்டா. அல்லது இதனால் பிற நாடுகளில் யூதர்கள் அநுபவித்து வரும் உரிமைகளும் அரசியல் அந்தஸ்தும் பாதிக்கப்படமாட்டா
இதுதான் பால்பர் அறிக்கையென்று சொல்லப் படுவது. இந்த அறிக்கை சம்பந்தமாக நாம் இரண்டொரு விஷயங்களைத் தெளிவு படுத்திக் கொண்டு விட வேண்டும். முதலாவது, இந்த அறிக்கையானது, பிரிட்டிஷாருடைய தனிக் கொள்கையை மட்டும் வெளிப்படுத்துவதா யில்லை. இந்தக் கொள்கையை—அதாவது, பாலஸ்தீனத்தில் யூதர்களின் உரிமையை அங்கீகரிக்கிற கொள்கையை—மற்ற எல்லா நேசக் கட்சியினரும் அங்கீகரித்தனர். பின்னர்க் கூடிய சமாதான மகாநாட்டிலும், இஃது ஊர்ஜிதம் செய்யப் பட்டது. இரண்டாவது, இந்த பால்பர் அறிக்கை வெளியான பிறகு, உலகத்தின் பல பாகங்களிலிருந்தும்