உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பாலஸ்தீனம்

யூதர்கள் வந்து, பிரிட்டிஷ் படையில் போர் வீரர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டு, நேசக் கட்சியினரின் சார்பாக யுத்தம் செய்திருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் துருக்கியர்களுக்கும், பிரிட்டிஷாருக்கும் நடைபெற்ற போராட்டத்தின் போது, யூதர்கள் மட்டும் அடங்கிய ஒரு தனிப் படை, பிரிட்டிஷார் பக்கம் இருந்து போர் புரிந்திருக்கிறது. இதனால் ஒரு சமயம், யூதர்கள் வசித்து வந்த இடத்திற்குக் கூட ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆயினும் யூதர்கள், பிரிட்டிஷ் தளகர்த்தர்கள் வியந்து பாராட்டும் வண்ணம் மிகத் தைரியமாகப் போர் புரிந்து, பிரிட்டிஷ் ராஜ தந்திரிகளின் அபிமானத்தையும், அநுதாபத்தையும் பெற்று விட்டார்கள்.

மூன்றாவது, பாலஸ்தீனத்தைத் தன்னுடைய செல்வாக்குக்குட்பட்ட ஒரு சமூகத்தார் வசம் வைத்திருப்பது, பிரிட்டனின் ஏகாதிபத்திய எண்ணத்திற்கு அநுகூலமாயிருந்தது. ஏனென்றால், பாலஸ்தீனத்தின் பூகோள அமைப்பானது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஸ்திரமாக இருப்பதற்குச் சௌகரியமான ஓரிடத்தில் இருக்கிறது. இதைப் பற்றி, முதல் அத்தியாயத்தில் கூறியிருக்கிறோம்.

எனவே பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலனுக்கும், பாலஸ்தீனத்தில் யூதர்களின் தேசீய ஸ்தலம் ஸ்தாபனமாவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதென்பது நன்கு புலனாகிறது. மெனாஷெம் உஸ்ஸிஷ்கின் என்ற பிரபல ஜையோனியத் தலைவன் ஒருவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/28&oldid=1671381" இலிருந்து மீள்விக்கப்பட்டது