உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பாலஸ்தீனம்

அதிகமாகப் படவில்லை. ஆனால், தாங்கள் கொண்டிருந்த தேசீய அபிலாஷைகளெல்லாம் பயனற்றுப் போய் விட்டனவே யென்றுதான் வருந்தினார்கள்; கனன்றெழுந்தார்கள்.

பால்பர் அறிக்கை வெளியான காலத்திலிருந்து, அதனை அராபியர்கள் எதிர்த்து வந்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறைதான்—அதாவது 1919ம் வருஷம்—அப்பொழுது அராபியத் தலைவனென்று அங்கீகரிக்கப்பட்ட எமிர் பெய்ஸலும், யூதர்களின் தலைவனான டாக்டர் வீஸ்மானும் ஒரு வித ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். சுதந்திர ஐக்கிய அராபிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், பால்பர் அறிக்கையை இரு சாராரும் அங்கீகரிப்பதாகவும், பாலஸ்தீனத்தில் யூதர்கள் தாராளமாக வந்து குடியேறுவதை ஏற்றுக் கொள்வதாகவும் இந்த ஒப்பந்தம் கூறியது.

பின்னர் 1920ம் வருஷம் மார்ச் மாதம் அராபியத் தலைவர்கள் ஒன்று கூடி, மேற்படி பெய்ஸலை சிரியாவுக்கும், பாலஸ்தீனத்திற்கும் சேர்ந்து அரசனாகத் தெரிந்தெடுத்தார்கள். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு சிரியாவின் மீது ஆதிக்கஞ் செலுத்த விரும்பிய பிரெஞ்சு அரசாங்கம், பெய்ஸலை அப்புறப் படுத்தி விட்டது. இதனால், அராபியர்களின் சார்பாக பால்பர் அறிக்கையை பெய்ஸல் அங்கீகரித்துக் கொண்டது பயனற்று விட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பற்றி அராபியர் யாருமே சிந்தனை செய்யவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/34&oldid=1671528" இலிருந்து மீள்விக்கப்பட்டது