உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அராபியர்களின்‌ தேசீய இயக்கம்‌

25

இதனை ஒரு முக்கிய விஷயமாகவும் அவர்கள் கருதவில்லை.[1]

பால்பர் அறிக்கையை எதிர்த்து வந்த அராபியர்கள், பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட ‘மாண்டேரி’ அரசாங்கத்திற்கு விரோதமாகவும், கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். இந்தக் கிளர்ச்சி பல சமயங்களில் பெரிய கலகங்களாகப் பரிணமித்து, அநேக உயிர்ச் சேதங்களையும், பொருள் நஷ்டத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது. இதைப் பற்றி நாம் ஆராயு முன்னர், அராபியர்களின் தேசீய இயக்கத்தைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

பிரிட்டிஷாரிடத்திலும், யூதர்களிடத்திலும் சுயநலங் காரணமாகத் துவேஷங் கொண்ட ஒரு சில சோம்பேறி பணக்காரர்களால் தூண்டி விடப்பட்டதே இந்த அராபிய தேசீயக் கிளர்ச்சி யென்றும், இவர்கள், ஒன்றுந் தெரியாத அராபிய ஏழை விவசாயிகளைப் பயமுறுத்தித் தவறான வழியில் அழைத்துச் செல்கிறார்களென்றும் ஒரு சிலர் பிரசாரஞ் செய்கின்றனர். இங்ஙனம் பிரசாரஞ் செய்வோர் யார், இவர்களுடைய நோக்கமென்ன, சுதந்திர தாகத்தினால் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிலும்


  1. பெய்ஸல் பின்னர் (23-8-1921) ஈராக் என்று அழைக்கப்படுகிற மெஸொபொடேமியா நாட்டின் அரசனாக்கப்பட்டான். இவனுடைய பெரு முயற்சியின் பேரில், 1932ம் வருஷம், ஈராக் நாடு சர்வதேச சங்கத்தில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இவன் 6-9-1933ல் ஸ்விட்ஜர்லாந்தில் இறந்து போனான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/35&oldid=1671547" இலிருந்து மீள்விக்கப்பட்டது