உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பாலஸ்தீனம்

யூதர்கள் குடியேற்றத்திற்குப் பின்னர், விஸ்தீரணமான பிரதேசங்களில் ஏகபோக விவசாயம் நடைபெற்றது. இயந்திரங்களை வைத்து நடத்தப் பெற்ற கைத்தொழிற் சாலைகள் தோன்றின. பெரும் பற்றான வியாபாரம் நடைபெறத் தொடங்கியது. இவைகளோடு, அராபியர்களின் சாதாரண விவசாயமும், குடிசைத் தொழிலும் போட்டி போட முடியுமா?

குடியேறின யூதர்கள், பெரும்பற்றான விவசாயத்தைச் செய்வதற்காக, அராபிய நிலச்சுவான்தார்களிடமிருந்தும், தனிப்பட்ட விவசாயிகளிடமிருந்தும் நல்ல விலை கொடுத்து, சாகுபடி செய்யப்படுகிற விவசாய நிலங்களையும், கரம்பாயிருந்த பிரதேசங்களையும் வாங்கினார்கள். விற்ற நிலச்சுவான்தார்கள், தங்கள் நிலத்தோடு ஒட்டி வாழாமல், நிலத்திலிருந்து கிடைக்கிற வருமானத்தை வைத்துக் கொண்டு, நகரங்களில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள், தங்கள் நிலங்களுக்கு நல்ல விலை கிடைக்கிற போது, அவற்றை விற்காமலிருப்பார்களா? தங்களுடைய நிலத்தை நம்பி, வாழ்க்கையை நடத்தி வந்த விவசாயிகளைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை?

யூதர்கள் வாங்கிக் கொண்ட நிலங்களில், அராபியர்கள் இனி விவசாயஞ் செய்வதெப்படி? அநேகருக்கு ஜீவனோபாயமே இல்லாமற் போய் விட்டது. ஒரு சிலர் விவசாயக் கூலிகளாய் அமர்ந்து வேலை செய்தார்கள். இன்னுஞ் சிலர், நகர்ப் புறங்களுக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/42&oldid=1671728" இலிருந்து மீள்விக்கப்பட்டது