52
பாலஸ்தீனம்
வேண்டுமென்ற நோக்கத்தோடு எழுந்த இந்தக் கிளர்ச்சி, பல ஆண்டுகளாகப் பிரிந்து கிடந்த அநேக அரசியல் கட்சிகளை ஒன்று படுத்தியது. கிளர்ச்சியின் பயனாகக் கலகங்கள் கிளம்பின. எகிப்தின் தேசீய சுதந்திரத்தை அங்கீகரிப்பதாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் கூறினர். இதன் பிறகே, இந்தக் கிளர்ச்சி நின்றது. எகிப்தியர்கள் அடைந்த இந்த வெற்றி, பாலஸ்தீன அராபியர்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தைக் கொடுத்ததென்பதில், ஆச்சரியமில்லையல்லவா? இது தவிர, 1936ம் வருஷம் ஜனவரி மாதம், சிரியாவிலுள்ள அராபியர்கள், பிரெஞ்சு அரசாங்கத்தாருக்கு விரோதமாக ஐம்பது நாள் வேலை நிறுத்தமொன்று நடத்தினர். இஃது அவர்களுக்கு வெற்றி யளித்தது. சிரியாவின் மீது தாங்கள் செலுத்தி வரும் ஆதிக்கத்தினின்று விலகிக் கொள்வதாகவும், சுதந்திரம் பெற்ற நாடு என்ற முறையில், சிரியா,சர்வ தேச சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்ந்து கொள்ள விண்ணப்பம் செய்து கொள்ளுமானால், அதனைத் தான் ஆதரிப்பதாகவும் பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்தது.[1] அடுத்தாற் போல், சிரியாவில் தங்கள் சகோதரர்களின் நிலைமைக்கும், தங்களுடைய நிலைமைக்கும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டார்கள் பாலஸ்தீன அராபியர்கள். தாங்-
- ↑ 29-3-1937ல் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தப்படி சிரியா, லெபனோன் பிரதேசங்களின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, 1939ம் வருஷத்தோடு பிரெஞ்சு நிருவாகம் சிரியாவில் முடிந்து விட வேண்டும். ஆனால், சிரிய ராஜதந்திரிகளுக்கு இது விஷயத்தில் சந்தேகமும், கவலையும் இருக்கிறதென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.