கலகங்கள்
51
தேசீய அபிலாஷைகள் ஒன்று திரண்டதேயாகுமென்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். 1933ம் வருஷத்திலிருந்து, அராபியப் பத்திரிகைகள், பிரிட்டிஷாரைத் தாக்கியும், பாலஸ்தீனத்தின் அரசாங்க நிருவாகத்தைப் பிரிட்டிஷார் ஏற்றுக் கொண்டது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொள்கையை யனுசரித்தே யென்றும் எழுதி வந்தன. இவற்றின் விளைவாகவோ என்னவோ, 1933ம் வருஷக் கடைசியில் பிரிட்டிஷாருக்கு விரோதமாக ஒரு பெரிய கலகம் கிளம்பியது. இது பின்னர், அடக்கப்பட்டு விட்ட தென்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை.
இந்த 1933ம் வருஷத்துக் கலகத்திற்கு இன்னொரு முக்கியமான காரணமுமுண்டு. இந்த வருஷம் மார்ச் மாதம், ஜெர்மனியில் நாஜி கட்சியினர் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டனர். இதன் விளைவாக, பாலஸ்தீனத்திற்கு, ஜெர்மனியிலிருந்து ஆயிரக் கணக்கான யூதர்கள் வந்து குடி புகுந்தார்கள். 1933ம் வருஷத்தில் 30,327 யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடி புகுந்திருக்கிறார்கள். இஃது அராபியர்களுக்குப் பெரிய திகிலை உண்டு பண்ணி விட்டது. தங்களுடைய பொருளாதார வாழ்வுக்குச் சாவு மணி அடிக்கப் பட்டு விட்டதாகவே இவர்கள் கருதினார்கள்.
1935-36ம் வருஷங்களில் அராபிய தேசீய இயக்கத்திற்கு ஒரு புதிய சக்தி பிறந்ததென்று கூற வேண்டும். எப்படியென்றால், 1935ம் வருஷக் கடைசியில், எகிப்தில் ஒரு பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. எகிப்திய தேசீய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட