உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பாலஸ்தீனம்

‘இஸ்திக்ளாலிஸ்ட்ஸ்’ (Istiqlalists) என்ற ஒரு புதிய கட்சி தோன்றியது. தேசீய இயக்கத்தை இன்னும் ஒழுங்காகவும், உறுதிப்பாடுடனும் நடத்த வேண்டுமென்பதே இந்தக் கட்சியின் கொள்கையா யிருந்தது. அதாவது, பெயரளவில் இதுகாறும் தேசீய இயக்கத்தில் சேர்ந்திருந்தவர்களுக்கு, இனி இடமில்லாமற் செய்யப்பட்டது.

1933ம் வருஷம் மார்ச் மாதம் ஜாபா நகரத்தில் ஒரு பெரிய மகாநாடு கூட்டப் பட்டது. இதற்கு, பாலஸ்தீனத்தின் பல பாகங்களிலுமுள்ள அராபிய நகரங்களின் நகரசபைத் தலைவர்கள் வந்திருந்தார்கள். ஒத்துழையாமைத் தத்துவத்தை அங்கீகரிப்பதாகவும், இதன் முதற்படியாக பிரிட்டிஷ் சாமான்களையும், யூதர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களையும், மேற்படியார்களுடைய வியாபார ஸ்தலங்களையும் பகிஷ்கரிக்க வேண்டுமெண்றும் இந்த மகாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்கக் காலத்திலிருந்தே, பாலஸ்தீனத்தில் அராபியர்களின் தேசீயப் போராட்டமானது, இனி மிக உறுதியுடன் நடைபெறு மென்பதற்குக் தேவையான சூசகங்கள் ஏற்பட்டு விட்டன.

பாலஸ்தீன அரசாங்கத்தார், சர்வதேச சங்கத்திற்கு 1933ம் வருஷம் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில், அராபிய தேசீய இயக்கமானது, முன் போலில்லாமல் இப்பொழுது ஜனங்களின் மனத்தில் நன்றாகப் பதிந்து கொண்டு விட்டதென்றும், இதற்குக் காரணம், சுற்றுப்புற நாடுகளிலுள்ள அராபியர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/60&oldid=1672196" இலிருந்து மீள்விக்கப்பட்டது