உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலகங்கள்‌

49

வந்தது. இந்த உற்சாகமும், ஆத்திரமும் ஒன்று சேர்ந்து, 1929ம் வருஷம் ஆகஸ்ட் மாதம் ஒரு பெரிய கலகமாகப் பரிணமித்தது. இதில் நூற்றுக் கணக்கான யூதர்கள் கொல்லப் பட்டார்கள். அநேகருக்குக் காயம். அரசாங்கத்தார், எகிப்திலிருந்து பிரிட்டிஷ் துருப்புகளை வரவழைத்து, அமைதி ஏற்படுத்தினார்கள். இந்த அமைதி காணு முறையில் நூற்றுக் கணக்கான அராபியர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் போனார்கள். இந்தக் கலக சம்பந்தமாக விசாரணை செய்த கமிஷன், தன் அறிக்கையில், அராபியர்கள் தங்களின் அரசியல் லட்சியங்கள் சிதற அடிக்கப் பட்டு விட்டதாகக் கருதியதாலும், யூதர்கள் பெரும் பான்மையோராகக் குடி புகுவதனால், தங்கள் எதிர்காலப் பொருளாதார வாழ்வு என்ன ஆகுமோ என்று கொண்ட பயத்தினாலுமே, இந்தக் கலகம் ஏற்பட்டதென்று கூறுகிறது.

இந்த 1929ம் வருஷக் கலகத்திற்குப் பிறகு, அராபியர்களின் தேசீய இயக்கமானது ஒழுங்காகவும், கட்டுப்பாடாகவும் வளரத் தொடங்கியது. இதுகாறும் இவர்கள் இந்தத் தேசீய இயக்கத்தின் பெயரால் நடத்தி வந்த போராட்டமானது, அவ்வளவு அரசியல் அநுபவ மில்லாத முறையில் இருந்தது.இப்பொழுதோ, அராபியத் தலைவர்கள் பலர், உலகத்தின் பல பாகங்களிலும், சிறப்பாக இந்தியா, எகிப்து முதலிய நாடுகளில் நடைபெற்று வந்த தேசீயப் போராட்டத்தின் போக்குகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்தனர். இதன் பயனாக, 1932ம் வருஷம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/59&oldid=1672184" இலிருந்து மீள்விக்கப்பட்டது