கலகங்கள்
59
பண்ணிவிட்டது. நகரத்தின் நெருக்கமானதோரிடத்திலிருந்த சில வீடுகள் இடித்துச் சமதரையாக்கப் பட வேண்டுமென்று அதிகாரிகள் தீர்மானித்தார்கள். கட்டிடங்கள் இங்ஙனம் சேர்ந்தாற் போலிருப்பதால், நகர சுகாதாரத்திற்குத் தீங்கு ஏற்படுகிறதென்றும், நகர புனர் நிர்மாண திட்டத்தை உத்தேசித்து, இவை இடிக்கப்பட வேண்டுமென்றும் அதிகாரிகள் சமாதானம் கூறினார்கள். இந்த நெருக்கமான இடத்திலுள்ள கட்டிடங்களில்தான் கலகக்காரர்கள் ஒளிந்து கொண்டிருந்து, துப்பாக்கிப் பிரயோகம் செய்து வந்தார்கள் என்ற பேச்சும் அப்பொழுது இருந்தது. கடைசியில் இந்த இடத்திலிருந்த சுமார் ஆறாயிரம் பேர், சில மணி நேர முனனெச்சரிக்கையுடன் காலி செய்யுமாறு கூறப்பட்டார்கள். இவர்கள் தங்கள் உயிரைத்தான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது; தங்கள் உடமைகளை அப்படியே விட்டு விட்டுப் போய் விட்டார்கள். இது சம்பந்தமாக, பாலஸ்தீன ஹைகோர்ட்டில் நடைபெற்ற ஒரு வழக்கில், பிரதம நீதிபதியான ஸர் மைக்கல் மக்டோனால்ட் தீர்ப்பளிக்கிற போது, ‘நகர நிர்மாண திட்டத்தை உத்தேசித்தும், சுகாதார காரணங்களுக்காகவும் இந்தக் கட்டிடங்களை இடிக்கிறோமென்று அரசாங்கத்தார் சமாதானம் கூறாமல், தற்காப்புக்காக இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியிருந்ததென்று உண்மையாகச் சொல்லியிருந்தால், அது மிகவும் கௌரவமாயிருந்திருக்கும்’ என்று குறிப்பிட்டது பலருடைய கவனத்தையும் இழுத்தது.[1]
- ↑ What's up in Palestine—Michael Greenberg p. 52.