60
பாலஸ்தீனம்
1936ம் வருஷம் செப்டம்பர் மாதம் ராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. சுமார் இருபதினாயிரம் துருப்புகளை, பாலஸ்தீனத்தின் பல பாகங்களுக்கும் அனுப்பி, பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராணுவச் சட்டத்தின் கீழ், நாடெங்கணும் கண்டிப்பான உத்திரவுகள் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டன. பார்த்தார்கள் அராபியத் தலைவர்கள். இந்த மகத்தான சேனாபலத்தின் முன்னர், மிகச் சிறிய நாட்டிலேயுள்ள அவர்கள் என்ன செய்ய முடியும்? சுற்றுப்புறமுள்ள சகோதர ஜாதியாரிடமிருந்து இவர்களுக்குப் பல வகை உதவிகள் கிடைத்தனவென்று சொல்லப் பட்டது கூட உண்மையாயிருக்கலாம். ஆனால், அந்த வெளி உதவிகளை வைத்துக் கொண்டு, இவர்கள் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும்? ஒளிந்து, ஒளிந்து சண்டை போடுவதற்குக் கூட முடியாதபடி, பிரிட்டிஷ் துருப்புகளின் பந்தோபஸ்து ஏற்பாடு இருந்தது. சுமார் ஆறு மாத காலம், இவர்களுடைய வியாபாரமே இல்லாமற் போய் விட்டது. புரட்சிக்காரர்களுக்கு யார் இனி உணவு அளிப்பது? அப்படி யாராவது கொடுக்க முன் வந்தாலும், எவ்வளவு காலம் கொடுக்க முடியும்?
பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும், பாலஸ்தீனத்தை ரத்தக் களரியாக்க விரும்பவில்லை. இதை உத்தேசித்தே, 1936ம் வருஷம் ஜூலை மாதம், பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்பட்ட பிறகு, அங்கு ஏற்பட்ட கலகங்களுக்கு அடிப்படையான காரணங்கள் என்ன-