உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலகங்கள்‌

61

வென்று விசாரிப்பதற்கும், ‘மாண்டேடரி’ அரசாங்க நிருவாகத்தின் கீழ் அராபியர்கள், யூதர்கள் முதலியோர் அநுபவித்து வரும் கஷ்ட நிஷ்டூரங்களைப் பற்றி விசாரிப்பதற்கும், லார்ட் பீல் என்பவனுடைய தலைமையில் ஒரு ராயல் கமிஷன் நியமனம் பெறுமென்று ஓர் அறிக்கை வெளியிட்டனர்.

இது தவிர, பாலஸ்தீனத்தைச் சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளின் அரசர்களும், இந்தக் கலகம் நீடித்துச் செல்வதை விரும்பவில்லை. அராபியா, ஈராக், ட்ரான்ஸ் ஜார்டோனியா ஆகிய இந்த மூன்று நாட்டு மன்னர்களும், இனியும் ரத்தப் பெருக்கு ஏற்படாமல் சமாதானம் செய்து கொள்வது நல்லதென்ற கருத்துப்பட ‘அராபிய பெரிய கமிட்டிக்’கு (Arab Higher Committee) கடிதங்கள் எழுதினார்கள். இந்த மூவர் எழுதிய கடிதங்களையும், மேற்படி கமிட்டியார் 1936ம் வருஷம் அக்டோபர் மாதம் 12ந் தேதி வெளியிட்டனர். அடுத்த நாள் 13ந் தேதி, வேலை நிறுத்தம் இனித் தேவையில்லையென்றும், இனி அவரவர் அலுவல்களைக் கவனிக்கலாமென்றும், ‘அராபிய பெரிய கமிட்டி’யார் அறிக்கை வெளியிட்டனர். அதற்கு மறுநாள் 14ந் தேதி, மலைப் பிரதேசங்களில், ஆயுதபாணிகளாக இருந்து கொள்ளை, கொலை முதலியன நடத்தி வந்த பல திறக் கூட்டத்தினரையும், அவற்றின் தலைவனான பவுஜீத்தின்—அல்—காலாக்ஜி என்பவன் கலைத்து விட்டான்.

நாட்டில் ஒரு வகையாகச் சமாதானம் ஏற்பட்டது. அராபியர்கள் எழுப்பிய புரட்சி, தோல்வி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/71&oldid=1672363" இலிருந்து மீள்விக்கப்பட்டது