இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62
பாலஸ்தீனம்
யடைந்து விட்டதென்று பிரிட்டிஷ் அரசாங்கத்தினரும், அவர்களின் நிழலில் வாழ்கின்ற யூதர்களும் கூறிக் கொண்டார்கள். ஆனால், அராபியர்களோ, தற்காலிகமாக இந்தப் புரட்சி தோல்வியடைந்து போனதாகக் காணப்பட்டாலும், பாலஸ்தீன தேசீய இயக்கத்திற்கு, அராபிய உலகம் முழுவதும் ஆதரவளிக்கிறதென்பதை இது நிரூபித்து விட்டதென்றும், இதன் மூலமாக அராபியர்களின் ஒற்றுமை வெளியாயிற்றென்றும் சொல்லிக் கொண்டார்கள்.