இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னணி
சிறிது காலமாகப் பாலஸ்தீனத்தில் நடைபெற்று வருகிற சம்பவங்களையும், இவை சம்பந்தமாகப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கர்ப்பக்கிரகத்தில் ஏற்பட்டிருக்கிற அதிர்ச்சியையும் பார்க்கிற போது, இந்தப் பாலஸ்தீனப் பிரச்னை, முடிவுக்கு வராத ஒரு பிரச்னையாகவே இருந்து விடுமோவென்ற எண்ணம் சில அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘எகானமிஸ்ட்’ (The Economist) என்ற ஒரு பிரிட்டிஷ் வாரப் பத்திரிகை, 10-7-37ல், பாலஸ்தீனப் பிரிவினை சம்பந்தமாக எழுதியது இங்குக் கவனிக்கத்தக்கது.
பீல் கமிஷனுடைய சிபார்சுகளை பிரிட்டன் நன்கு வரவேற்ற போதிலும், உலகத்தின் மற்ற நாடுகள், இந்தப் பிரிவினையை, பாலஸ்தீனத்தில் வசிக்கிற இரண்டு ஜனங்களின் நஷ்டத்தின் மீது பிரிட்டன் லாபமடையக் கூடிய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய முறைக்கு ஓர் உதாரணமென்று கருதுகின்றன.
பாலஸ்தீனம், ஒரு சிறிய நாடாயிருந்தாலும், அது தற்போதைய உலகப் பிரச்னைகளின் முன்னணியில் வந்து நிற்கக் கூடிய நிலைமைக்கு வந்து விட்டது. ஸ்பெயினும் இப்படித்தானே. ஆனால் ஸ்பெயினுக்கு ஏற்பட்டு விட்ட நரம்புத் தளர்ச்சி, புனித பாலஸ்தீனத்-