உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

திற்கும் ஏற்படக் கூடாதென்பதே அறிஞர்கள் பிரார்த்தனை.

7–2–39ல் லண்டனில் சமரஸ மகாநாடு கூடிய அதே தருணத்தில், பாலஸ்தீனத்தில் அடக்கு முறை தேவதை காலதேவனோடு கை கோத்துக் கொண்டு கோர தாண்டவம் செய்த வண்ணமாயிருக்கிறாள். அராபியர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். அடக்கு முறையை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற நிபந்தனையை விதித்து, அஃது அங்கீகரிக்கப்பட்ட பிறகே, அராபியப் பிரதிநிதிகள் சமரஸ மகாநாட்டு மேஜைக்குச் செல்ல இசைந்திருக்க வேண்டுமென்றும், இது விஷயத்தில் இவர்கள் 1921ம் வருஷத்தில் ஐரிஷ் பிரதிநிதிகள், பிரிட்டனுடன் சமரஸம் பேசுவதற்கு முன்னர் நடந்து கொண்ட மாதிரியைப் பின் பற்றியிருக்கலாமென்றும் சில ராஜ தந்திரிகள் அபிப்பிராயப் படுகிறார்கள். இந்தச் சர்ச்சையில் நான் தற்போழ்து நுழைய விரும்பவில்லை. மகாநாடு தொடங்கி விட்ட பிறகு அதைப் பற்றி வாதம் செய்து என்ன பயன்?

வெளிநாட்டு விவகாரங்களில், தமிழர்களாகிய நாம் இன்னும் அதிகமான சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே என் கோரிக்கை.

வெகுதானிய

தை உ௬
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/8&oldid=1654465" இலிருந்து மீள்விக்கப்பட்டது