இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64
பாலஸ்தீனம்
பற்றி விரிவாக வியாக்கியானஞ் செய்து கொண்டு போவது இந்த நூலின் நோக்கமன்று. இது செய்த சிபார்சுகளை மட்டும் சுருக்கமாக இங்குக் கூறுவோம்.
1. பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட தொந்திரவுகளுக்கெல்லாம் மூல காரணம், ஒன்றுக்கொன்று சமரஸமாகப் போக முடியாத இரண்டு விதமான தேசீய சக்திகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும், தேசத்தை ஆள வேண்டுமென்று முனைந்து நிற்கின்றன. ஒவ்வொரு சக்தியும், தன்னுடைய கட்சியே சரியென்று சாதிக்க விரும்புகிறது.
2. இந்த இரண்டு சக்திகளையும் ஒன்று படுத்தி வைக்க, ‘மாண்டேடரி’ அரசாங்கம் சென்ற இருபது வருஷ காலமாகப் பிரயத்தனம் செய்து வந்தும், பயன் உண்டாகவில்லை.
3. ‘மாண்டேடரி’ நிருவாகம் கோரிய பலனைக் கொடுக்கவில்லை.
4. ஆகவே, பாலஸ்தீனத்தை மூன்று கூறுகளாகப் பிரித்து விட வேண்டும்.
5. மத்திய தரைக் கடலோரத்திலுள்ள சமதரைப் பிரதேசம் யூதர்களின் நாடாக்கப்பட வேண்டும்; குன்றுகள், வனாந்திரங்கள் நிறைந்ததும், ட்ரான்ஸ் ஜார்டோனியாவை கிழக்கெல்லையாகவும், காஜா துறைமுகத்தோடு கூடிய ஒரு சிறு பிரதேசத்தை மேற்குப் பக்கத்திலும் கொண்ட இடை வெளிப் பிரதேசம் அராபியர்-