உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவினைப் பிரச்னை

65

களின் நாடாக்கப்பட வேண்டும். இந்த நாடு, டிரான்ஸ் ஜார்டோனியா நாட்டுடனேயே சேர்க்கப்பட்டு விடும். ஜெருசலேம், பெத்ல்ஹெம் போன்ற புண்ணிய ஸ்தலங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பிரிட்டனிடமே இருக்க வேண்டியிருப்பதால், ஜெருசலேத்திலிருந்து ஜாபா துறைமுகம் வரையில் செல்லக் கூடியஒரு பிரதேசம், பிரிட்டனுடைய நிரந்தர நிருவாகத்தின் கீழிருக்கும்.[1] இந்தப் பிரதேசம் தவிர, ஹைபா, டிபேரியாஸ், ஸபாத், ஏக்ரே, அக்காபா ஆகிய துறைமுகப் பட்டினங்களும், நகரங்களும் பிரிட்டன் வசத்திலேயே இருக்கும். யூதருக்கென்று வகுக்கப் பட்டுள்ள பிரதேசத்தில் வசிக்கும் 2,25,000 அராபியர்களும், அராபியர்களுக்கென்று ஒதுக்கப் பட்டுள்ள நாட்டிற்கு பலவந்தமாக மரற்றப் பட்டு விட வேண்டும்.[2]

இந்தப் பிரிவினையில் சம்பந்தப்பட்டவர் மூன்று கட்சியினரல்லவா? அதாவது பிரிட்டிஷ் அரசாங்கத்தார், யூதர், அராபியர். இந்த மூன்று கட்சியினரும், மேற்படி பீல் கமிஷன் செய்த சிபார்சுகளைப் பற்றி என்ன அபிப்பிராயங் கொண்டனர் என்பதைத் தெரிந்து கொள்வோம்.


  1. இந்தப் பிரதேசத்தில்தான், பாலஸ்தீனத்தின் முக்கியமான ரெயில் பாதையும், ‘ட்ரங்க் ரோட்டும்’ செல்கின்றன.
  2. அராபியர்களுக்கென்று ஒதுக்கப் பட்ட பிரதேசத்தில் உள்ள யூதர்கள் மிகச் சொற்பமே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/75&oldid=1672393" இலிருந்து மீள்விக்கப்பட்டது