66
பாலஸ்தீனம்
பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்குக் காரணங்கள் என்னவென்பதைப் பற்றிக் கமிஷனார் கூறியிருப்பதையும், இதற்கு அவர்கள் சிபார்சு செய்துள்ள பரிகாரங்களையும், பொதுவாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அங்கீகரித்துக் கொண்டனர். தவிர, பிரிவினை செய்யப்பட்ட பிரதேசங்களின் எல்லைகளை நிர்ணயிக்கிற விவரங்கள் சம்பந்தமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது வரையில், யூதர்களுக்கு நிலங்கள் விற்பனை செய்வது கட்டுப் படுத்தப் பெறுமென்றும், மற்றும், வருஷத்தில் சராசரி 8,000 யூதர்கள்தான் பாலஸ்தீனத்தில் குடி புகலாம் என்ற வரையறை ஏற்படுத்தப் பெறுமென்றும் அறிக்கை வெளியிட்டனர்.
யூதர்களுக்கு, இந்தப் பீல் அறிக்கை ஒரு வெடிகுண்டு மாதிரி வந்து விழுந்தது. ‘மாண்டேடரி’ நிருவாகம், கோரிய பலனைக் கொடுக்கவில்லையென்று பீல் அறிக்கை கூறி விட்டது இவர்களுக்கு வருத்தமாயிருந்தது. தவிர, தங்களுக்கென்று வகுக்கப்பட்ட பிரதேசமோ ஒரு ஜில்லா விஸ்தீரண முடையதாயிருந்தது இவர்களுக்கு அதிருப்திதான்.[1]யூதர்களில் பெரும்பாலோர் இந்த மாதிரியான அபிப்பிராயத்தையே கொண்டார்கள்.
- ↑ அதிக நீளம் சுமார் 110 மைலும், அதிக அகலம் சுமார் 30 மைலும் உள்ள பிரதேசமே யூதருக்கென்று பிரிக்கப்பட்டது