உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவினைப் பிரச்னை

67

தொழிற் கட்சியினர்[1], பாலஸ்தீனம் முழுவதும் யூகர்களுக்குச் சொந்தமான நாடாக வேண்டுமென்றும், யூகர்களின் குடிபுகும் விகிதத்தை வரையறுக்கக் கூடாதென்றும் கூறினார்கள். ஆனால் இந்தக் கட்சியினருக்கு, நாட்டிலே அதிகமான செல்வாக்கில்லை.

ஜையோனிய ஸ்தாபனத்தின் நிருவாகக் கௌன்சில் தலைவனாகிய உஸ்ஸிஷ்கின் என்பவனுடைய தலைமையில் ஒரு கட்சியினர், பிரிவினைச் சிபார்சை எதிர்த்து நின்றனர். பழையபடியே, ‘மாண்டேடரி’ நிருவாகம் நடைபெற வேண்டுமென்றும், பிரிவினை செய்வது அநுபவ சாத்தியமற்றதென்றும் இவர்கள் கூறினார்கள். இந்த அபிப்பிராயங் கொண்டவர்கள் பெரும்பாலும், யூத மத்திய வகுப்பினரே.

யூகர்களிலேயே இன்னொரு கட்சியினர், இந்தப் பிரிவினையை வேறொரு திருஷ்டியில் எதிர்த்தனர். இவர்கள், தொழிற் கட்சியினரிலே தீவிரவாதிகள். இவர்கள், இந்தப் பிரிவினையினால், பாலஸ்தீனத்தில் அராபியர்களும், யூகர்களும் ஒரே நாட்டில் ஒன்று சேர்ந்து வாழ்வதற்குப் பதிலாக, பிரிந்து வாழ நேரிடுமென்று கூறினர். இவர்கள் இப்படிச் சொன்ன போதிலும், யூதர்கள் குடி புகும் விகிதத்தைக் குறைக்கவோ, அராபியர்களின் தேசீய சுதந்திர உரிமையை அங்கீகரிக்கவோ விரும்பவில்லை. எனவே, இவர்கள் கொண்ட அபிப்பிராயத்திற்கு யாரும் மதிப்புக் கொடுக்கவில்லை.


  1. பாலஸ்தீனத்திலுள்ள யூதர்களில் கூட தொழிற் கட்சியினர் என்றும், பாசிஸ்ட்டுகள் என்றும், மிதவாதிகளென்றும், தீவிரவாதிகளென்றும் பல பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், அனைவரும், சமூக நலன் என்ற விஷயத்தில் ஒன்றுபட்டவர்களே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/77&oldid=1672399" இலிருந்து மீள்விக்கப்பட்டது