68
பாலஸ்தீனம்
டாக்டர் வீஸ்மானைத் தலைமையாகக் கொண்ட ஒரு சாரார், அராபிய பாலஸ்தீனத்தில் சிறுபான்மையினராக யூதர்கள் இருப்பதை விட, தனிப்பட்ட ஒரு நாட்டினராகப் பிரிந்து விடுதலே நல்லதென்றும், அப்பொழுதே, யூதர்களின் சுய முயற்சி அதிகரிக்குமென்றும், இதன் மூலமாகப் பிற்கால அராபியர்களின் எதிர்ப்பைக் கூட சமாளிக்கலாமென்றும், தவிர, தங்களுக்குப் பிரிட்டிஷ் ராணுவ பலத்தின் ஆதரவு எப்பொழுதும் இருக்குமென்றும் கூறி, பிரிவினையை ஆதரித்தனர்.
லார்ட் சாமியலைத் தலைமையாகக் கொண்ட வேறொரு பிரிவினர், சுதந்திர அராபிய பாலஸ்தீனத்தில், யூதர்கள் சிறு பான்மையோருக்குரிய எல்லா உரிமைகளையும் பெற்று, அமைதியாக வாழ்தலே நல்லதென்றும், அவர்களுடைய ஜன விகிதத்தைப் பொறுத்து, அந்த நாட்டு அரசாங்க நிருவாகத்தில் பங்கு பெறுவதோடு திருப்தியடைய வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டனர். இந்தக் குழுவினருடைய அபிப்பிராயத்திற்கு, சாய்வு நாற்காலியில் உல்லாசமாக அமர்ந்து கொண்டு, அரசியலைப் பற்றி வாசாமகோசரமாகப் பேசும் யூத அரசியல் வாதிகளிடத்தில்தான் மதிப்பு இருந்தது. இங்ஙனம், குடி புகுந்த யூதர்களுக்குள், இந்தப் பிரிவினையைப் பற்றிப் பல விதமான அபிப்பிராய வேற்றுமைகள் உலவின.
1937ம் வருஷம் ஆகஸ்ட் மாதம் ஸ்விட்ஜர்லாந்திலுள்ள ஜூரிச் நகரத்தில், இருபதாவது அகில உலக ஜையோனிய காங்கிரஸ் கூடியது. அப்பொழுது, பாலஸ்தீனப் பிரிவினை சம்பந்தமாக யூதர்களுக்குள்