உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவினைப் பிரச்னை

69

ஏற்பட்டுள்ள அபிப்பிராய வேற்றுமைகளைச் சமரஸப்படுத்தத் தீவிர முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் காங்கிரஸில் கலந்து கொண்ட எந்தக் கட்சியினருமே, பிரிவினையை அப்படியே நிராகரிக்க விரும்பவில்லை. யூதர்களுக்கென்று பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரதேசத்தை, இன்னுஞ் சிறிது விசாலப்படுத்திக் கொடுக்க வேண்டுமென்னும் விஷயமாகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாருடன் சமரஸம் பேசுமாறு காங்கிரஸின் நிருவாக சபைக்கு அதிகாரங் கொடுப்பதாகக் கடைசியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இனி அராபியர்களுடைய அபிப்பிராயங்கள் எங்ஙனம் உருக் கொண்டு எழுந்தனவென்பதைப் பற்றிச் சிறிது கவனிப்போம். இவர்கள் எவ்வித கட்சி பேதமுமில்லாமல், இந்தப் பிரிவினைத் திட்டத்தை எதிர்த்தார்கள். ‘நமது தாய் நாடாகிய பாலஸ்தீனத்தைப் பிரிக்க முடியாது. அதன் ஓர் அங்குலப் பிரதேசத்தையும் எந்த முஸ்லீமும் விட்டுக் கொடுக்க மாட்டான்’ என்று ‘மப்டி’யின் பத்திரிகையாகிய ‘அல் லீவா’ எழுதியது. 1937ம் வருஷம் ஜூலை மாதம் 23ந் தேதி ‘அராபிய பெரிய கமிட்டி’யார், சர்வதேச சங்கத்தைச் சேர்ந்த ‘நிரந்தர மாண்டேட்ஸ் கமிஷனு’க்கும், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு மந்திரிக்கும், பிரிவினை சம்பந்தமாகத் தங்கள் கருத்துக்களைத் தொகுத்து ஒரு யாதாஸ்து சமர்ப்பித்தனர். இதில் ‘மாண்டேடரி’ நிருவாகம் திருப்திகரமாக வேலை செய்யவில்லையென்பதை பீல் கமிஷன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/79&oldid=1672407" இலிருந்து மீள்விக்கப்பட்டது