பிரிவினைப் பிரச்னை
73
நிதானஸ்தர்கள் என்று பீல் கமிஷன் அறிக்கை புகழ்ந்து எழுதியிருந்தது. ஆனால், அந்தப் பிரதேசத்தில்தான் கலகத்தின் உத்வேகம் அதிகமாகக் காணப்பட்டது. 1937ம் வருஷம் ஆகஸ்ட் மாதம், அராபியக் குடியானவர்கள் ஆங்காங்குத் தனித் தனி ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக் கொண்டு, கட்டுப்பாடாக யூதர்களின் பொருள்களையும், பிரிட்டிஷ் பொருள்களையும் பகிஷ்காரஞ் செய்தனர். காலிலீ என்ற பிரதேசத்தில், கலக உணர்ச்சி அதிகமா யிருந்தபடியால், அங்குச் சென்று சமனப்படுத்த எல்.ஒய். ஆண்ட்ரூஸ் என்ற உத்தியோகஸ்தன், விசேஷக் கமிஷனராக நியமிக்கப் பெற்று, அனுப்பப்பட்டான். இவன், அராபியர்களோடு பழகுவதில் மிகவும் நிபுணன் என்று பெயர் பெற்றவன். ஆனால், இவன் 1937ம் வருஷம் அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டான். பீல் கமிஷன் செய்த பிரிவினைச் சிபார்சுக்கு இவனே காரணனாயிருந்தான் என்று அராபியர்கள் கொண்ட சந்தேகமே இவன் கொலைக்குக் காரணம் என்று பின்னர் கூறப்பட்டது. 1937ம் வருஷம் செப்டம்பர் மாதம் சிரியாவிலுள்ள ப்ளவ்டான் என்ற ஊரில், அராபியர்களின் காங்கிரஸ் ஒன்று கூடியது. பாலஸ்தீனத்துப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த, இங்கு ரகசியமாகப் பல திட்டங்கள் போடப்பட்டனவென்று தெரிகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், மற்றொரு புதிய அமிசமும் வந்து கலந்து கொண்டது. இத்தாலியர்கள், அராபியர்களிடையே பலத்த பிரசாரஞ் செய்து வந்தார்களென்றும், இஸ்லாமுக்குப் பாதுகாப்பாளனாக