72
பாலஸ்தீனம்
பொதுவாக அராபியர்களுக்கு அதிகமான ராஜதந்திர அநுபவம் போதாதென்று, வார்சேல் உடன்படிக்கைக்கு உடந்தையாயிருந்த ஒரு சிலர் கூறிய போதிலும், பீல் கமிஷன் செய்த சிபார்சுகளைக் கண்டித்து அராபியத் தலைவர்கள் விடுத்த அறிக்கைகளையும், அராபியப் பத்திரிகைகள் எழுதிய தலையங்கங்களையும் கூர்ந்து கவனித்துப் பார்ப்பவர்களுக்கு, ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையான தத்துவம் என்ன, அதற்காகத் தங்கள் நாடு எவ்வாறு உபயோகிக்கப் படுகிறது என்பன போன்ற விவரங்களை, இவர்கள் எவ்வளவு அருமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்பது நன்கு புலப்படும். ஆக, பாலஸ்தீனப் பிரிவினையை அராபியர்கள் ஒரு முகமாக நிராகரித்து விட்டார்கள். பாலஸ்தீனத்திலுள்ள அராபியர்கள் அனைவரும், இந்தப் பிரிவினை விஷயத்தில் ஒற்றுமைப்பட்ட அபிப்பிராய முடையவர்களாயிருக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டுமானால், மீண்டும் கலகம் கிளம்பும் என்று அராபியத் தலைவர்கள் பலர் பகிரங்கமாகக் கூறினார்கள். இவர்கள் சொன்னபடியே, 1937ம் வருஷம் கடைசி பாகத்தில் முன் போல், கலகம் ஆரம்பித்து விட்டது.
வெடிகுண்டுகள் எறியப்பட்டன. தந்திக் கம்பிகள், ரெயில் தண்டவாளங்கள் முதலியன அறுக்கப்பட்டும், பெயர்க்கப்பட்டும் போயின. அராபியர்கள் கூட்டங் கூட்டமாக ஆங்காங்கு ஒளிந்திருந்து, பிரிட்டிஷாரையும், யூதரையும் கொன்றனர். காலிலீ என்ற பிரதேசத்திலுள்ள அராபியர்கள் மிகவும்