பக்கம்:பாலும் பாவையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 வாங்கிக் கொள்வதற்காக அவள கையை நீட்டினாள் அதற்குள், 'இன்னொரு முறை நாம் இங்கே திரும்பி வர வேண்டுமா, என்ன? அப்படி வருவதால் யாருக்கு என்ன லாபம்? அதனால் அவருக்கும் தொல்லை, நமக்கும் தொல்லை!-வேண்டாம், திரும்பி வரவே வேண்டாம் என்று தோன்றியது அவளுக்கு உடனே அவள் நீட்டிய கையை இழுத்துக்கொண்டு, “என்னிடம் சாவி என்னத்துக்கு? நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!” எனறான "பரவாயில்லை; இதை நீயே வைததுக்கொள்-என்னிடம் வேறொரு சாவி இருக்கிறது” என்று சொல்லி அவளிடம் ஒரு சாவியை வற்புறுத்திக் கொடுத்து விட்டுக் கனகலிங்கம் சென்றான் தெருக்கோடியைக் கடக்கும் வரை தலையில் கை வைத்த வண்ணம் அவனையே பார்ததுக் கொண்டிருந்த அகல்யா, 'சட்டென்று திரும்பி வராந்தாவில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். அவளையும் அறியாமல் அவள் இதழ்கள் 'ரொம்ப விசித்திரமான மனிதர்! இவரை விட அந்த விசுவாமித்திரரே எவ்வளவோ தேவலை போலிருக்கிறது!’ என்று முணுமுணுத்தன