பக்கம்:பாலும் பாவையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17ջ அதற்குள் கண்டக்டர், "ஹோல்டான்!” என்று இரைந்து விட்டு, "இனிமேலாவது, பர்ஸ் கிடைப்பதாவது!-இந்நேரம் கைமேல் கைமாறி எவவளவு தூரம் போயிருக்குமோ?இறங்குங்கள் ஸார்!-இறங்கி நடராஜா ஸர்வீஸில் போங்கள்' என்றான் கேலியாக இதைக் கேட்டதும் அங்கிருந்த ஒரு பெரியவருக்குக் கோபம் வந்துவிட்டது 'மனுஷன் பர்ஸைத் தொலைத்து விட்டு அவதிப்படுகிறான், நீ இப்பொழுது போய் அவனைக் கேலி செய்கிறாயே! உங்களுக்கெல்லாம் சமய சந்தர்ப்பமே தெரியாதா?’ என்று அவர் எரிந்து விழுந்தார் “அவன்மேல் குற்றமொன்றும் இல்லை, ஸார்! வாழ்க்கையில் அவன் அனுபவித்திருக்கும் கஷ்டம் அவனை அப்படி இரக்க மற்றவனாக ச செய்து விட்டிருக்கிறது!’ என்றான் கனகலிங்கம் பெரியவர் அவனை வெறுப்புடன் பார்த்தார் ‘போயும் போயும் நீர் அவனுக்குப் பரிந்து பேசப்போனிரே!” என்றார் அவருக்கு அருகிலிருந்தவர் "அது சரி, எவனிடம் பரிவு காட்ட வேண்டுமோ அவனிடம் நீங்கள் பரிவு காட்டமாட்டோம் என்கிறீர்களே?-அதற்கு நான் என்ன செய்வது?” என்று சொல்லிக் கொண்டே கனகலிங்கம் ‘பஸ்ட்ஸை விட்டு இறங்கி, ஸ்டாண்'டுக்கு வந்தான். அவனைச் சபலம் விடவில்லை; மறுபடியும் அங்குமிங்கும் பார்த்தான். “என்ன ஸார், பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டார் அங்கே நின்று கொண்டிருந்த ஒருவர் “பர்ஸைக் காணோம், அதைத்தான் பார்க்கிறேன்.”என்றான் அவன் “எவவளவு ரூபாய் இருந்ததோ?” “என்னுடைய ஸ்தாவர, ஜங்கமச சொத்தெல்லாம் அதில்தான் அடங்கியிருந்தது. லார்' 'ஐயையோ-அப்படியானால் அதன் மதிப்பு எவ்வளவு ஸார், இருக்கும்?” என்றார் அவர்