பக்கம்:பாலும் பாவையும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ‘இவன் யாராயிருக்கும்? இவன் ஏன் அடிக்கடி இங்கே வந்து தொலைக்கிறான். ' கனகலிங்கம் அதற்குமேல் யோசிக்கவில்லை, சந்தடி செய்யாமல் அவனுக்குப் பின்னால் சென்று அவனை 'டபக்' கென்று தாவிப் பிடித்தான் அவ்வளவுதான்; அவன் அப்படியும் இப்படியுமாகத் திமிறி க் கொண்டு ஒட யத் தனித்தான் கனகலிங்கம் விடவில்லை; அவனை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு “நீ யார்?' என்று அதட்டிக் கேட்டான் - "நான் யார் என்றா உனக்குத் தெரியவேண்டும்? அதற்காக நான் இங்கு வரவில்லை; நீ யார் என்று தெரிந்து கொண்டு போவதற்காகத்தான் வந்தேன்!” என்று சொல்லிக்கொண்டே, கனகலிங்கத்தை ஓர் உதை உதைத்துத் தள்ளிவிட்டு, அந்த ஆசாமி எடுத்தான் ஒட்டம்'