பக்கம்:பாலும் பாவையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறிச் செல்லும் ரயில் தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கிக் கவிழட்டும்.” “வேண்டாம், அம்மா! ரயில் கவிழ்ந்தால் அவன் மட்டும் சாகமாட்டான்; அவனுடன் எத்தனையோ நிரபராதிகள் சாக நேரிடும்.....” * “பாண்டியனுக்காக மதுரைமா நகரைக் கொளுத்தும் போது கண் ண கி மற்றவர்களுக்காகக் க வலைப் பட்டாளா? இராவணனுக்காக இலங்கையைக் கொளுத்தும்போது அனுமார் சீதாதேவியைத் தவிர மற்றவர்களுக்காக கவலைப்பட்டாரா? அப்படியிருக்க, நான் மட்டும் ஏன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?” “கோபம் எவ்வளவு கொடியது என்பதைத்தான் அந்தக் கதைகள் காட்டுகின்றன. அத்தகைய கோபத்துக்கு நீங்களுமா ஆளாக வேண்டும்...?” "அந்தக் கதைகள் கிடக்கட்டும்; என்னுடைய கதையைக் கொஞ்சம் தயவு செய்து கேட்கிறீர்களா?” என்று அந்தப் பெண் பேச்சை மாற்றினாள். “சொல்லுங்கள்; கேட்கிறேன்” என்றான் கனகலிங்கம். “நானும் அந்த நயவஞ்சகனும் சென்னைக் கலா சாலை யொன்றில் சேர்ந்து, ஹாஸ்ட'லில் தங்கிப்படித்து வந்தோம்.” "ஓஹோ கதை பழைய கதையாகத்தான் இருக்கும் போலிருக்கிறதே...?” ‘வாழ்க்கையே பழைய வாழ்க்கையாயிருக்கும் போது, அதை அடிப்படையாகக் கொண்ட கதை மட்டும் எப்படிப் புதிய கதையாயிருக்கும்?” "அதுவும் உண்மைதான்!-ஆனால், அதற்காக ஒருத்தியைப் பலரும், பலரை ஒருத்தியும் விரும்பும் காதல் சாலை'யாகக் 'கலாசாலை மாறிவிடக் கூடாதல்லவா?” “ஏது. நீங்கள் ரொம்பப் பொல்லாதவராயிருப்பீர்கள் போலிருக்கிறதே?”