பக்கம்:பாலும் பாவையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 “அதெல்லாம் ஒன்று மில்லை-பேச்சுத் தான் அப்படி யிருக்கும்; நடத்தை அதற்கு நேர் விரோதமாயிருக்கும்!” "அதுதானே மனித சுபாவம்?-அப்படிப் படித்துக்கொண்டு வரும்போது.” “உங்கள் இருவருக்குமிடையே காதல் தொபுகடி ரென்று குதித்ததாக்கும்?” "அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்களேன்!” “நடுவே 'வில்லன் யாரும் வரவில்லையா?” “வந்தான்; ஆனால் அவன் மகா சாது; பெயர் தசரதகுமாரன். சாட்சாத் தசரதகுமாரனோ சீதா தேவிக்காக சிவ தனுசை முறித்தான்; மாரீசனை வதைத்தான், இராவணனுடன் போரும் தொடுத்தான். எங்கள் தசரதகுமாரனோ ஒரு முறை என்னுடன் வந்து மாட்டினி ஷோ பார்க்கக்கூட விரும்பவில்லை-அவ்வளவு பயம்!-என்னைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதோடு தன் காதலை அவன் நிறுத்திக் கொண்டான். இளமையின் இதயத் துடிப்பை அறியாத அவனுடைய நடத்தை எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை.” "ஆகவே, அறியாத தசரதகுமாரனைக் கைவிட்டு அறிந்த மகானுபாவனுடன் நீங்கள் கூடிக் குலாவினிர்களாக்கும்..?” "ஆமாம்; அந்த மகானுபாவனின் அழகைவிட அவன் பேச்சுத்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் அழகை அவன் அனுபவித்த விதமே அலாதி! அவன் ரஸ்னை கண், காது, மூக்கு, உதடு ஆகியவற்றோடு நிற்காது; நான் அணிந்துகொண்டிருந்த நகைகளின்மேல் வேறு திரும்பும், அடிக்கடி அவன் அவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த நகைகள்கூட உன்னால் எவ்வளவு அழகு பெற்றுவிடுகின்றன!’ என்று கூறி அதிசயிப்பான். அதைக் கேட்கும்போதெல்லாம் என் உச்சி குளிர்ந்து விடும்-இப்படி எத்தனையோ சம்பவங்கள்!இத்தனைக்கும் நாங்கள் இருவரும் ஒரே ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள்கூட அல்ல. எனக்குத் தஞ்சை அவனுக்கு ராமநாதபுரம்.”