பக்கம்:பாலும் பாவையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நிறுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கு...” "காதல்தானே உயிர்நாடி போன்றது?’ என்றாள் அவள். “இல்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால் தற்காலத் தம்பதிகள் அதைக் கடைப்பிடிப்பதுதான் முடியாத காரியமா யிருக்கிறது!’ என்றான் அவன். "ஏன் முடியாது?-ஆண்களால் வேண்டுமானால் முடியாமலிருக்கலாம்; பெண்களால் நிச்சயம் முடியும்.” கனகலிங்கம் சிரித்தான். "ஏன் சிரிக்கிறீர்கள்?” “ஒன்றுமில்லை; கதையைச் சொல்லுங்கள்?” “சரி, கேளுங்கள்-கலாசாலையில் எங்கள் காதல் விழிகளால் வளர்ந்தது; கலாசாலைக்கு வெளியே புன்னகையால் மலர்ந்தது; சினிமா மாட்டினி ஷோக்களிலும், கடற்கரையோரங்களிலும் எங்கள் காதல் கரங்களாலும் இதழ்களாலும் கனிந்தது. கடைசியில்...” 'கோடை விடுமுறை வந்ததாக்கும்? பிரிய மனமில்லாமல் பிரிந்தீர்களாக்கும்?” "ஆமாம்; அத்துடன் எங்கள் கலாசாலைப் படிப்பும் ஒருவாறு முடிந்துவிட்டது. “சரி, உங்கள் காதலை உங்களுடைய பெற்றோர் விரும்பியிருக்க மாட்டார்கள்.” “அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” “எல்லாம் தெரிந்த கதைதானே?” “தெரியாத கதைகள் கற்பனையில் வேண்டுமானால் உதிக்கலாம்; உண்மையில் உதிக்க முடியாதே!-அப்புறம் கேளுங்கள் எங்கள் காதலை எங்களுடைய பெற்றோர் விரும்பாமற் போகவே இருவரும் வேறு வழியின்றி வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி இங்கே வந்து சேர்ந்தோம்.” “காந்தர்வ மணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணி வந்தீர்களாக்கும்?”