பக்கம்:பாலும் பாவையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கனகலிங்கம் வெளியே சென்றதும் அகல்யா ஒன்றும் தோன்றாதவளாய் ஒரு கணம் நின்றாள். மறுகணம் கட்டிலின்மேல் 'தொப்'பென்று விழுந்தாள். அவளையும் அறியாமல் அவளுடைய கைவிரல்கள் ஒன்றையொன்று ‘மளக் மளக் கென்று நெரித்தன. “என்ன இருந்தாலும் அந்தத் தசரதகுமாரனைப் போல் இவர் அவ்வளவு அசடு இல்லை!” என்று அவளுடைய இதழ்கள் முணுமுணுத்தன. அவ்வளவுதான்; அவளுடைய மனத்தில் அப்புறம் எந்தவிதமான சலனமும் இல்லை. அவளுடைய கண்கள் எதையும் குறிப்பிட்டு நோக்காமல் நிலைத்தது நிலைத்தபடி நின்றன. இமைகள், ‘இனி தங்களுக்கு ஒரு வேலையும் இல்லை’ என்று எண்ணியோ என்னமோ, அவள் புருவங்களுக்குக் கீழே அசைவற்று ஒதுங்கிவிட்டன. இந்த நிலையில் தன்னை மறந்து அவள் எவ்வளவு நேரம் இருந்தாளோ தெரியவில்லை. தடக் கென்ற சத்தம் அவள் காதில் விழுந்தது. அந்தச் சத்தத்தின் காரணமாக அவள் மனம் மீண்டும் சலன முற்றது. கண்கள் நிலை குலைந்தன; இமைகளும் அவற்றைத் தொடர்ந்து தங்கள் வேலைய்ைச் சுறுசுறுப்புடன் செய்ய ஆரம்பித்தன. அப்படியே புரண்டுபடுத்து அவள் தலையணையை எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டு அடுத்த அறையைப் பரிதாபத்துடன் பார்த்தாள்! அதே சமயத்தில் அந்த அறையில் எரிந்துகொண்டிருந்த மின்சார விளக்கு டக் கென்று அணைந்தது. 'சரி பீஷ்மாச்சாரியார் கதவைத் தாளிட்டுவிட்டார்; விளக்கையும் அணைத்துவிட்டார்!” என்று அகல்யா சிரித்தாள். அத்துடன் அவள் நிற்கவில்லை; “இருட்டில்தான் உங்களுக்குத் தூக்கம் பிடிக்குமோ?” என்றாள் இரு கால்களையும் கட்டிலின் மேல் மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டே. "ஆமாம்! ஏன் அப் படிக் கேட்கிறாய்?- பணக் காரர்களுக்கும் திருடர்களுக்குந்தான் இருட்டில் தூக்கம் பிடிக்காதென்று உனக்குத் தெரியாதா?” என்றான் அந்த