பக்கம்:பாலும் பாவையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அவரிடம் கொடுத்து விடுங்கள்’ என்றார்; நான் “சரி” என்று வ்ாங்கிக்கொண்டு வ்ந்தேன்!” என்றாள் அகல்யா, “இதற்கா இவ்வளவு சங்கடப்படுகிறாய்? பொய் சொல்லத் தூண்டுபவர்கள், பொய் சொல்வதற்குக் காரணமாயிருப் பவர்களெல்லாம் சங்கடப்படாமல் இருக்கும்போது நீ மட்டும் ஏன் சங்கடப்பட வேண்டும்?” என்றான் கனகலிங்கம். "ஏற்கனவே பழக்கமில்லை; அதனால்தான்.” “பழக்க மில்லாவிட்டால் என்ன?-பழக்கிக் கொடுக்கத்தான் இந்தப் பரந்த உலகம் விரிந்து கிடக்கிறதே!” என்று கையை விரித்துக் காட்டினான் கனகலிங்கம். "இருந்தாலும் இதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது.” என்றாள் அகல்யா தயக்கத்துடன். “அது என்ன சங்கடம்?” “ஹோட்டல்காரர் அந்த 'ஒடிப்போனவனுக்கு நீங்கள் நண்பரா என்று உங்களைக் கேட்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும் எனக்காகப் பொய்தானே சொல்ல வேண்டியிருக்கும்?” “உலகத்தில் எத்தனையோ பேர் பெண்ணுக்காக எத்தனையோ பாதகங்கள் செய்கிறார்கள். அப்படி யிருக்கும்போது உனக்காக நான் ஒரு பொய் கூடவா சொல்லக்கூடாது?’ என்றான் கனகலிங்கம் சிரித்துக்கொண்டே இதைக் கேட்டதும் நன்றியுணர்ச்சியால் தன்னை மறந்து அகல்யா இரு கரங்களையும் கனகலிங்கத்தின் கன்னங்களுக்கு அருகே கொண்டு போனாள். அந்தச் சமயத்தில் ஹோடடல்காரர் தம் ஹோட்டலில் சாப்பிட்டுத் தம்முடைய வயிற்றைக் கெடுத்துக்கொள்ள விரும்பாமல் வீட்டுக்குப் போவதற்காக வெளியே கிளம்பி, அந்த வழியே வந்தார்! அவரை ப் பார்த்ததும் அடுப் பங்கரையில் திருட்டுத்தனமாகப் பால் குடிக்கும் பூனை, வீட்டுக்காரியைக் கண்டதும் பதுங்கி ஓடுவதுபோல, இருவரும் ஒருகணம் தயங்கி, மறுகணம் இரண்டே எட்டில் தங்கள் அறையை அடைந்தனர்