பக்கம்:பாலும் பாவையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 'பாம்புகள் தங்களை விழுங்கி வாழ வேண்டுமே என்பதற்காகத் தவளைகள் பிழைத்திருக்க வேண்டுமா, என்ன?” “என்ன இருந்தாலும் நம்மைப் போன்றவர்களுக்குக் கெளரவம் என்று ஒன்று இருக்கிறதே!” என்று சொல்லிவிட்டு, அகல்யா அவன் முகத்தை ஊடுருவிப் பார்த்தாள். "கெளரவம் தகுதியைப் பொறுத்தது. அது நம்மைத் தேடிக் கொண்டு வரவேண்டுமே தவிர, நாம் அதைத் தேடிக்கொண்டு செல்லக் கூடாது. அப்படித்தேடிச் சென்று அடையும் கெளரவம் நிலைக்கவும் நிலைக்காது!” என்று சொல்லிக்கொண்டே, புத்தகக் கட்டைத்துக்கி மேஜையின்மேல் போட்டுவிட்டுக் கனகலிங்கம் திரும்பினான். இருவருடைய கண்களும் நேருக்கு நேராக நோக்கின. அகல்யா சட்டென்று தன் பார்வையைத் திருப்பி 'அப்படிச் சொல்லுங்கள். அதற்காகத் தான் காந்தி மகாத்மாவின் கொள்கையைப் பின்பற்றுகிறீர்களோ?” என்றாள் எதையோ புரிந்துகொண்டவள்போல. "ஆமாம்; ஆனால் அதே கொள்கையைச் சிலர் தங்களுடைய கருமித்தனத்தைப் பிறருக்குத்தெரியாமல் மறைத்துக் கொள்வதற்காகவும் பின்பற்றுவதுண்டு...!” 'இப்பொழுது உங்களிடம் மட்டும் கருமித்தனம் இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்.?” "நான் ஏழை; என்னிடம் பணம் தேங்கிக் கிடக்கவில்லை. பணம் எங்கே தேங்கிக் கிடக் கவில்லையோ, அங்கே க ரு மி த் த ன த் ைத க் காணமுடியாது!’ “சரி, உங்களைப் போன்ற ஏழைகளிடம் க்ருமித்தனத்தைக் காணாவிட்டாலும் அழகை அனுபவிக்கும் கன்மையைக் கூடவா காணமுடியாது?’ என்று