பக்கம்:பாலும் பாவையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அவள் சிரிததாள் அவனும் சிரித்தான். சிறிது நேரத்துக் குப் பிறகு, ”அதெல்லாம் சரி: ஹோட்டல்காரரிடம் என்ன சொல்லப் போகிறாய்?” "இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏற்கெனவே எல்லாம் சொல்லியாகிவிட்டது!” * “என்ன சொன்னாய்? 'இன்று காலை, உன் கணவர் இன்னும் வரைவில்லையா? என்று அவர் கேட்டார் வரவில்லை வருவதாகவே இல்லை என்றேன் நான் ஏன்? என்றார். மாற்றலான உத்தியோகத்தை மேலதிகாரிகள் ரத்துச் செய்து விட்டார்களாம். எனவே, சிக்கனத்தை முன்னிட்டு என்னைத் தம் நண்பருடன் கிளம்பிச் சென்னைக்கே வந்துவிடச் சொல்லிக் கடிதம் எழுதியிருக்கிறார்; நான் இன்றிரவு செல்லும் ரயிலில் போகிறேன் என்றேன்-பேசாமல் இருந்துவிட்டார்!”. 'நானும் பாக்கிறேன்-ஒருதரம் புளு கினால், அந்தப் புளு கு அத்துடன் நிற்பதில்லை தொடர்ந்து ஏதாவது புளுகச் செய்துவிடுகிறது!” என்றான் கனகலிங்கம். 'வழுக்கி விழுந்த ஒருத்தி உண்மையைச் சொன்னால் ஜனங்கள் எங்கே அவளுக்காக அனுதாயப்படுகிறார்கள்? அதற்குப் பதிலாகத்தான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்களே!” என்றாள் அகல்யா ※ 岑 ※ அன்றிரவு சென்னையை நோக்கிச் செல்லும் ரயிலில் இருவரும் போய்க்கொண்டிருந்தனா ஒருவரை யொருவர்