பக்கம்:பாலைக்கலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hయuత&&త__IDబత5ు 27 இன்பத்தையும், நிழல் கடமையையும் குறிப்பன.அவற்றை மறந்து, இகந்து செல்தல் அழிவுக்குக் காரணமாவதுபோல, இவளும், அதனையுணராது நீ பிரியின் அழிவள். வேரோடு மரம் வெம்ப' என்றது, இவள் மட்டுமன்று, இவள் படும் வேதனையைக் காணச்சகியாத இவள் குடும்பத்தவரும் அல்லற்படுவர் என்பதற்காகும். கோல் கோடித் துயர் விளைவிக்கும் அரசு, கேட்பார் பேச்சைக் கேட்டு அவனும் பிரிந்து பொருள் தேடப் போவேன் என்ற முறைமை கடந்த செயலைச் சுட்டியதாகும். சொற்பொருள்: 1. சினை - கிளை.2.சிறியவன் - குணங்களால் சிறியவன். 3. இகந்து வரம்பு மீறி, இசை - புகழ். 4. தெறுதல் - காய்தல். 5. அலவுற்று- வருந்தி, 6. வினைவர் அரசியல் அலுவலர். கோல்கோடியவன் - கொடுங்கோலன்; அரச மரபுக்கு மாறாக நடப்பவன். 8. இடைகொண்டு - புணர்ச்சிக்கிடையே பிரிவு மேற்கொண்டு. இறத்தி - போவாய், 9. உடைபு நெஞ்சு உக - நெஞ்சழிந்து கெட்டுப்போக ஒளி ஒடற்பாள்-அழகு கெடுவாள். 10. சேக்கை - படுக்கை. 11. புடை பெயர்தல் - சிறிதே விலகல். இனைபவள் - வருந்துபவள்.13. பனிய கண் நீர் நிறைந்த கண்கள். படல் ஒல்லா - உறக்கம் கொள்ளா. படர் - துன்பம். கூர்கிற்பள் - மிகுவள். 15. துனி - பிரிவு. 18. இருள் நோக்கம் - வெறுப்புத் தரும் பார்வை, ஈரம் - அன்பு ஈரத்தின் இயன்ற - அன்பு காரணமாகப் பிறக்கும். 19. அவலம் - துன்பம். 10. பல்லியும் இசைத்தன (தான் பிரிந்து செல்லும்போது, இன்ன நாளிலே தவறாமல் திரும்பி விடுவேன்' என்று உறுதி கூறிச் சென்றான் ஒரு காதலன். அந்த நாள் வந்தும், அவன் வரவில்லை. அது கண்டு அல்லற்பட்டு வாடிய அவன் மனைவியைத் தோழி தேற்ற முயல்கிறாள்.) 'அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும், பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும், புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என, பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர் வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான், கேஎள், இனி: 5 'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால், கடியவே - கணங்குழாஅய்! - 'காடு' என்றார்; அக் காட்டுள், துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னிரைப் பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு' எனவும் உரைத்தனரே. 'இன்பத்தின் இகழ்ந்து ஒரீஇ இலை தீந்த உலவையால், 10 துன்புறுஉம் தகையவே காடு' என்றார்; அக் காட்டுள், அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/35&oldid=822026" இலிருந்து மீள்விக்கப்பட்டது